Posts

அதிர்ச்சியூட்டும் வரதட்சனை மரணங்கள்

 இஸ்லாமிய மார்க்கம் இயற்கையான மார்க்கமாகும். அதனால் தான் இதில் உள்ள சட்ட திட்டங்கள் மனிதனுடைய இயற்கை பண்பிற்கு இயல்பாகவே ஒத்துப் போகின்றது. ஆனால் அப்படிப்பட்ட சட்டதிட்டங்களை மனிதன் மீறும் பொழுது தான் இல்லாத பொல்லாத பிரச்சனைகளும் சமூக சீர்கேடுகளும் உண்டாகின்றன. அப்படிப்பட்ட சமுதாய சீர்கேடுகளில் ஒன்று தான் "வரதட்சணை "என்ற பிச்சை... அல்லாஹுத்தஆலா குர்ஆனில் கூறுகின்றான் "பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை மனமுவந்து கொடுங்கள்"(அத்தியாயம் 4 வசனம் 4) இவ் வசனத்தில் ஆண்களைப் பார்த்து பெண்களை நீங்கள் திருமணம் செய்ய நாடினால் அவர்களுக்கு உரித்தான மணக்கொடைகளை கொடுக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கின்றான்.. இதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டம் ஒரு ஆண் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவன் அந்தப் பெண் கேட்கக்கூடிய அந்த பெண் வீட்டார் கேட்கக்கூடிய மணக்கொடைகளை கொடுக்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதைத்தான் கூறியிருக்கின்றார்கள். ஆனால் இந்தியா போன்ற நாடுகளிலே மாற்று கலாச்சாரத்தை பின்பற்றி இஸ்லாமியர்களும் வரதட்சனை என்ற பிச்சையை வாங்க ஆரம்பித்ததின் விளைவு எ...

நிறவெறியை வீழ்த்திய வித்தகன்

 உலகம் விஞ்ஞானத்திலும் கண்டுபிடிப்புகளிலும் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தாலும் இன்றளவும் நிறத்தாலும் இனத்தாலும் மொழியாலும் மக்களை சிறுமைப்படுத்துகின்ற அடிமைப்படுத்துகின்ற ஒடுக்கின்ற வேலைகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன.... வளர்ந்த நாடுகள் என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த கொடுமையை ஒழிக்க முடியவில்லை காரணம் ஒழிப்பதற்குரிய உண்மையான முறையை கடைபிடிக்கவில்லை என்பதுதான்..... அப்படி அமெரிக்காவிலே நிற வெறியால் நிலைகுலைந்து போன வீரரை நிலைப்படுத்திய மார்க்கம் என்ற தலைப்பின் கீழ் ஒரு வரலாற்று நாயகரை காண்போம்.. கருப்பின மக்கள் கொத்தடிமைகளாக பணி செய்யும் ஒரு வெள்ளைக்கார துரையின் விவசாய பண்ணையில் கூலி வேலை செய்த ஒடெஸ்லா லீ -க்ரேடி தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை 1942 ஜனவரி 17ஆம் தேதி பிறந்தது.....

இஸ்லாமிய கலாச்சாரத்தின் மூன்று தூண்கள்

 இன்றைய உலகில் எத்தனையோ கலாச்சாரங்கள் தோன்றி மறைந்துள்ளன ஆனால் உலகத்திலேயே முன் மாதிரி மனிதர்களை உத்தமர்களை உருவாக்கிய உருவாக்கிக் கொண்டிருக்கின்ற ஒரே கலாச்சாரம் இஸ்லாமிய கலாச்சாரம் மாத்திரம் தான். ஏனென்றால் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு இறைவனால் வழங்கப்பட்டது தான் இஸ்லாமிய கலாச்சாரம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது 23 ஆண்டுகால நபித்துவ வாழ்க்கையில் மேற்கொண்ட பெரும் முயற்சியால் வரலாறு காணாத சமூக சீர்திருத்தங்களை செய்து காட்டினார்கள். மனித வரலாற்றில் அதற்கு முன்போ பின்போ கண்டிராத ஒரு சிறந்த வாழ்க்கை முறையை சீர்மிகு இஸ்லாமிய வாழ்க்கை நெறியை அமைத்துக் கொடுத்தார்கள் கண்ணியத்திற்குரிய சஹாபா பெருமக்களுக்கு மத்தியில் 13 ஆண்டுகள் உழைத்து மதினாவில் அண்ணலார் ஏற்படுத்திய அந்த இஸ்லாமிய வாழ்க்கை முறையில் பிரதானமாக மூன்று அம்சங்கள் இருந்தன. ஒன்று அந்த வாழ்க்கையில் எளிமை இரண்டு அர்ப்பணிப்பு உணர்வு மூன்று வெட்கமும் கற்பொழுக்கமும் நிறைந்திருந்தன. இம்மூன்றும் தான் இஸ்லாமிய நாகரீகத்தின் மூன்று தூண்களைப் போன்றதாகும் இம்மூன்றிற்கும் இறை நம்பிக்கை ~அதில் உறுதிப்பாடு ~மறுமை சிந்தனை ~ஆகியவை அடிப்ப...

குர்ஆனும் அறிவியலும்

 உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆன் பல எண்ணற்ற அத்தாட்சிகளை தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது அதில் அறிவியல் அத்தாட்சிகளும் அடங்கும் குர்ஆனில் கிட்டத்தட்ட 750 அறிவியல் அத்தாட்சிகள் வரை மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன... இன்னும் எத்தனையோ விஷயங்கள் பொதுத்திருக்கலாம் அதை அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ்  மட்டுமே......... ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுவார் science without religion is lame. Religion without science is blind. மதம் இல்லாத அறிவியல் முடமானது அறிவியல் இல்லாத மதம் குருடானது .... எனவே திருக்குர்ஆனை படிப்பதோடு திருக்குர்ஆனும் அறிவியலும் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்கின்றதா அல்லது ஒன்று மற்றொன்றுடன் இணங்கிப் போகின்றதா என ஆய்வு செய்து பார்ப்போம் முதலில் திருக்குர்ஆன் என்பது ஓர் அறிவியல் நூல் அல்ல. ஆனால் ஆயத் எனப்படும் அத்தாட்சிகள் கொண்டதாகும்.. இப்பொழுது குர்ஆன் கூறும் ஒரு அறிவியல் உண்மையை பார்ப்போம் . : 1925 ஆம் ஆண்டு அமெரிக்கா விஞ்ஞானியான எட்வின் ஹப்பள் (edwin hubble) என்பவர் தொலைநோக்கி அதாவது டெலஸ்கோப் மூலம் வானத்தை ஆராய்ந்து ஓர் விஞ்ஞான சான்றை முன் வைத்தார் அது அண்டவெளியில் உள்ள தாரகை கூட்டங்கள் க...