குர்ஆனும் அறிவியலும்

 உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆன் பல எண்ணற்ற அத்தாட்சிகளை தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது அதில் அறிவியல் அத்தாட்சிகளும் அடங்கும் குர்ஆனில் கிட்டத்தட்ட 750 அறிவியல் அத்தாட்சிகள் வரை மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன... இன்னும் எத்தனையோ விஷயங்கள் பொதுத்திருக்கலாம் அதை அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ்  மட்டுமே.........

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுவார் science without religion is lame. Religion without science is blind. மதம் இல்லாத அறிவியல் முடமானது அறிவியல் இல்லாத மதம் குருடானது ....

எனவே திருக்குர்ஆனை படிப்பதோடு திருக்குர்ஆனும் அறிவியலும் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்கின்றதா அல்லது ஒன்று மற்றொன்றுடன் இணங்கிப் போகின்றதா என ஆய்வு செய்து பார்ப்போம் முதலில் திருக்குர்ஆன் என்பது ஓர் அறிவியல் நூல் அல்ல. ஆனால் ஆயத் எனப்படும் அத்தாட்சிகள் கொண்டதாகும்..


இப்பொழுது குர்ஆன் கூறும் ஒரு அறிவியல் உண்மையை பார்ப்போம்.

: 1925 ஆம் ஆண்டு அமெரிக்கா விஞ்ஞானியான எட்வின் ஹப்பள் (edwin hubble) என்பவர் தொலைநோக்கி அதாவது டெலஸ்கோப் மூலம் வானத்தை ஆராய்ந்து ஓர் விஞ்ஞான சான்றை முன் வைத்தார் அது அண்டவெளியில் உள்ள தாரகை கூட்டங்கள் கேலக்ஸி யாவும் ஒன்று மற்றொன்றில் இருந்து விரைவாக விலகி பின்வாங்கி செல்கின்றன. எனவே இந்தப் பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகின்றது என்ற கருத்தினை உறுதிப்படுத்தினார் ஆனால் இதை கண்டுபிடிப்பதற்கு சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது அத்தியாயம் 51 வசனம் 47 والسماء بنيناها بايد وانا لموسعون.

பொருள்: மேலும் நாம் வானத்தை சக்திகளை கொண்டு அமைத்தோம் நிச்சயமாக நாம் விரிவு படுத்த கூடியவர்களாக இருக்கிறோம்.

இந்த வசனத்திலே மூஸிவூன் என்ற அரபி சொல்லுக்கு அதனை விரிவாக்கிக் கொண்டுள்ளோம் என்பதே சரியான மொழிபெயர்ப்பாகும் விரிந்து கொண்டே செல்லும் பரந்த தன்மை கொண்டதாக இந்த பிரபஞ்சத்தை அல்லாஹ் படைத்திருப்பதை இந்த வார்த்தை சுட்டுகின்றது... அல்லாஹு அக்பர்...

இந்த கண்டுபிடிப்பை குறித்து ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அமெரிக்க அறிவியல் அறிஞர் கூறுகின்றார் நாம் வாழும் இந்த பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகின்றது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பானது இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அறிவு புரட்சிகளில் ஒன்றாகவே திகழ்கிறது என்பதாக தனது a brief history of time என்ற புத்தகத்திலே குறிப்பிடுகின்றார்...

Comments

Popular posts from this blog

இஸ்லாமிய கலாச்சாரத்தின் மூன்று தூண்கள்

அதிர்ச்சியூட்டும் வரதட்சனை மரணங்கள்

நிறவெறியை வீழ்த்திய வித்தகன்