அதிர்ச்சியூட்டும் வரதட்சனை மரணங்கள்

 இஸ்லாமிய மார்க்கம் இயற்கையான மார்க்கமாகும். அதனால் தான் இதில் உள்ள சட்ட திட்டங்கள் மனிதனுடைய இயற்கை பண்பிற்கு இயல்பாகவே ஒத்துப் போகின்றது. ஆனால் அப்படிப்பட்ட சட்டதிட்டங்களை மனிதன் மீறும் பொழுது தான் இல்லாத பொல்லாத பிரச்சனைகளும் சமூக சீர்கேடுகளும் உண்டாகின்றன.

அப்படிப்பட்ட சமுதாய சீர்கேடுகளில் ஒன்று தான் "வரதட்சணை "என்ற பிச்சை...

அல்லாஹுத்தஆலா குர்ஆனில் கூறுகின்றான் "பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை மனமுவந்து கொடுங்கள்"(அத்தியாயம் 4 வசனம் 4)

இவ் வசனத்தில் ஆண்களைப் பார்த்து பெண்களை நீங்கள் திருமணம் செய்ய நாடினால் அவர்களுக்கு உரித்தான மணக்கொடைகளை கொடுக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கின்றான்.. இதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டம் ஒரு ஆண் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவன் அந்தப் பெண் கேட்கக்கூடிய அந்த பெண் வீட்டார் கேட்கக்கூடிய மணக்கொடைகளை கொடுக்க வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதைத்தான் கூறியிருக்கின்றார்கள். ஆனால் இந்தியா போன்ற நாடுகளிலே மாற்று கலாச்சாரத்தை பின்பற்றி இஸ்லாமியர்களும் வரதட்சனை என்ற பிச்சையை வாங்க ஆரம்பித்ததின் விளைவு என்னவென்று சொன்னால் சமுதாயத்தில் முதிர்கன்னிகள் அதிகமாகியது உடனே ஏராளமான பெண்கள் தன் உயிரை மாய்த்துக் கொள்கின்ற நிலை!!! இதற்கு முக்கிய காரணம் இந்த வரதட்சனை என்ற பிச்சை தான்..... இது தோன்றியதின் வரலாறு என்பது ஹிந்துக்களிடத்திலே பெண்களுக்கு சொத்தில் அறவே பங்கு கிடையாது எனவே பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்கும் போது அவர்களுக்கு தேவையான நகைகளையும் ஆபரணங்களையும் பொருட்களையும் கொடுத்து வந்தனர் ஆனால் காலப்போக்கில் அது எழுதப்படாத விதியாக ஆகிவிட்டது...

    பின்பு இந்தியாவிலே 1956 ஆம் ஆண்டு பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்று சட்டம் இயற்றப்பட்ட பின்பும் இந்த கொடுமை இன்னும் நீண்டு கொண்டிருக்கின்றது பல குடும்பங்களை வாட்டிக் கொண்டிருக்கின்றது..... இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துக் கொண்டால் சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று பறைசாற்றிய ஒரே மார்க்கம் இந்த உலகத்திலே இஸ்லாம் மட்டும்தான்.

அப்படிப்பட்ட புனித மார்க்கத்திலும் இந்த கேவலமான பண்பு முஸ்லிம்களிடத்திலே பரவி இருக்கிறது இது ஆக வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

வரதட்சணையினால் ஏற்படும் மரணங்கள்

சமுதாயத்தில் வரதட்சணை என்பதன் கூறப்படியால் எண்ணற்ற பெண்கள் நாள்தோறும் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர் இந்திய அளவிலே பார்த்தோம் என்று சொன்னால்தான் 2004 ஆம் ஆண்டு 7020 நபர்கள் , 2005 ஆம் ஆண்டு 6 7 8 7 பெண்கள் , 2006 ஆம் ஆண்டு 7 6 18 பெண்கள் இந்த வரதட்சணை கொடுமையால் இறந்திருக்கின்றனர் (நேஷனல் கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ).

இன்றளவும் எண்ணற்ற மரண ஓலங்கள் இந்த வரதட்சணையால் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கின்றன இதை வாங்குபவர்கள் எத்தனை சாக்குகள் சொன்னாலும் பெண் வீட்டாரின் சாபத்தை வாங்குவதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது.

வரதட்சணை விஷயத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின் நிலைப்பாடு:

இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்: இஸ்லாம் ஆண்கள்தான் மணக்கொடை கொடுக்க வேண்டும் என்று பணிக்கின்றது இதற்கு மாற்றமாக ஆண்கள் பெண்களிடம் இருந்து மணக்கொடையை வாங்கினால் இது அல்லா இன்னும் ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டளைகளுக்கு மாற்றமானது. மேலும் அருவருக்கத்தக்க புதிய அனுஷ்டானமாகும் அனுஷ்டானம் ஆகும் எனவே இது போன்ற வரதட்சணை என்ற கேவலத்தில் இருந்து நாம் தவிர்ந்திருப்பது அவசியமாகும் அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்......

Comments

Popular posts from this blog

இஸ்லாமிய கலாச்சாரத்தின் மூன்று தூண்கள்

நிறவெறியை வீழ்த்திய வித்தகன்