இஸ்லாமிய கலாச்சாரத்தின் மூன்று தூண்கள்

 இன்றைய உலகில் எத்தனையோ கலாச்சாரங்கள் தோன்றி மறைந்துள்ளன ஆனால் உலகத்திலேயே முன் மாதிரி மனிதர்களை உத்தமர்களை உருவாக்கிய உருவாக்கிக் கொண்டிருக்கின்ற ஒரே கலாச்சாரம் இஸ்லாமிய கலாச்சாரம் மாத்திரம் தான். ஏனென்றால் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு இறைவனால் வழங்கப்பட்டது தான் இஸ்லாமிய கலாச்சாரம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது 23 ஆண்டுகால நபித்துவ வாழ்க்கையில் மேற்கொண்ட பெரும் முயற்சியால் வரலாறு காணாத சமூக சீர்திருத்தங்களை செய்து காட்டினார்கள். மனித வரலாற்றில் அதற்கு முன்போ பின்போ கண்டிராத ஒரு சிறந்த வாழ்க்கை முறையை சீர்மிகு இஸ்லாமிய வாழ்க்கை நெறியை அமைத்துக் கொடுத்தார்கள்

கண்ணியத்திற்குரிய சஹாபா பெருமக்களுக்கு மத்தியில் 13 ஆண்டுகள் உழைத்து மதினாவில் அண்ணலார் ஏற்படுத்திய அந்த இஸ்லாமிய வாழ்க்கை முறையில் பிரதானமாக மூன்று அம்சங்கள் இருந்தன.

ஒன்று அந்த வாழ்க்கையில் எளிமை

இரண்டு அர்ப்பணிப்பு உணர்வு

மூன்று வெட்கமும் கற்பொழுக்கமும் நிறைந்திருந்தன.

இம்மூன்றும் தான் இஸ்லாமிய நாகரீகத்தின் மூன்று தூண்களைப் போன்றதாகும் இம்மூன்றிற்கும் இறை நம்பிக்கை ~அதில் உறுதிப்பாடு ~மறுமை சிந்தனை ~ஆகியவை அடிப்படையாகும்.

இத்தகைய உயர்ந்த கலாச்சாரத்தை அகற்ற வேண்டும் அந்நிய கலாச்சாரமான மேற்கத்திய கலாச்சாரங்களை முஸ்லிம்களுக்குள் புகுத்த வேண்டும் என்பதற்காக ஏனைய சதிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன....

குறிப்பாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறி சென்றாலும் அவர்கள் தமது கலாச்சாரத்தை இந்தியர்களின் மனதில் புகுத்தி விட்டார்கள்...

"ஆங்கிலேயர்களின் கல்விக் கொள்கையை இந்தியாவில் பரப்ப வந்த லார்ட் மெக்காலே 175 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னான்".... நான் இந்தியாவில் உருவாக்கியுள்ள கல்விக் கொள்கை முஸ்லிம்கள் உட்பட அதை படிக்கும் எல்லா இந்தியரையும் ஐரோப்பியராக மாற்றி விடும். உடல் நிறத்தளவில் இந்தியராக இருப்பார்கள் சிந்தனை அளவில் ஐரோப்பிய மேற்கு கலாச்சாரத்தை ஏற்று விடுவார்கள்...

பாருங்கள் இதனுடைய விவரம் புரிகிறதா!.... இதுதான் அந்நியர்களின் சக்தி சஹாபாக்கள் உண்மையாகவே இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றியதின் காரணத்தினால் உலகமே அவர்களின் காலடியிலே கிடந்தது ஆனால் நாமோ மாற்றாளர்களின் கலாச்சாரத்தில் மதி மயங்கி நமது உண்மை நிலையை மறந்து விட்டோம் நமது முன்மாதிரிகளான ஸஹாபாக்களின் வாழ்வை தொலைத்து விட்டோம் அந்தோ கை சேதம்!!!

இஸ்லாமிய கலாச்சாரத்தின் மூன்று அடிப்படை தூண்களை பற்றி பார்ப்போம்

1: முதலாவது தூண் "எளிமை"

இந்த முழு உலகத்திற்கும் உச்சகட்ட எளிமையை கற்றுக் கொடுத்தவர்கள் இறுதி தூதர் எம்பெருமானார் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான்.....

நான் அடிமை சாப்பிடுவதைப் போன்று சாப்பிடுவேன் என்றும் சாய்ந்து கொண்டு சாப்பிட மாட்டேன் என்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள் (புகாரி பக்கம் 363).

இதனால் தான் நபியவர்களின் பாசறையில் பயின்ற சஹாபாக்களின் எல்லா நிலையிலும் எளிமையை கடைபிடிக்கக்கூடிய நிலையை பார்க்க முடிகின்றது உதாரணமாக ஒரு சம்பவத்தை கூற வேண்டும் என்று சொன்னால் உலகிற்கே முன்மாதிரி ஜனாதிபதி கிட்டத்தட்ட 33 லட்சம் சதுர மயில் கிலோமீட்டர் பரப்பளவை ஆட்சி செய்த அன்றைய காலத்தின் வல்லரசுகள் எல்லாம் நடுநடுங்கிய ஒரு உத்தமர் தான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்படிப்பட்ட வல்லமை இருந்தும் கூட ஒரு தடவை அவரை சந்திப்பதற்காக பாரசீக நாட்டின் தூதுவர் மர்சுபான் வருகின்றார்..... முஸ்லிம்களிடம் ஜனாதிபதி உமர் ரலியல்லாஹு அவர்களைப் பற்றி விசாரிக்கின்றார் -எங்கே இருக்கிறார் என்பதாக..... அங்கே இருந்த ஒரு முஸ்லிம் சுட்டிக் காட்டினார் அதோ அந்த மரத்திற்கு கீழே உறங்கிக் கொண்டிருக்கின்றாரே அவர்தான் உமர் எங்களின் ஜனாதிபதி என்று கூறுகின்றார்....

இதைக் கண்ட அந்த தூதருக்கு தலைகால் புரியவில்லை வல்லரசுகளை எல்லாம் நடுநடுங்க வைக்கக்கூடிய இந்த உமர் இவ்வளவு எளிமையாக ஒரு அடிமையைப் போல சாதாரண படுத்து உறங்கிக் கொண்டிருக்கின்றாரே என்று ஆச்சரியப்பட்டு போனார் இதுதான் நபி அவர்கள் காட்டித் தந்த எளிமை....

இந்த எளிமையை தான் இஸ்லாம் வரவேற்கின்றது விரும்புகின்றது...

Comments

Popular posts from this blog

அதிர்ச்சியூட்டும் வரதட்சனை மரணங்கள்

நிறவெறியை வீழ்த்திய வித்தகன்